அப்படி தான் இப்படி....(வீரன் தாமரை )

கவலைகளை வீட்டின் முடுக்குகளெல்லாம்
ஆக்கிரமிப்பு செய்ய விட்டதாய்
உன் ஆசைமனைவி கூறலாம்...
"சந்தோழங்க்கலை விரித்து வீசி எறிந்துள்ளேன்
உனது நாட்களில்
அவை சுக களிம்பு பூசி
நாளும் வருவது நீ அறியவில்லையா "
என்று சொல்....

உனது புன்னகைகள் காணாமற் போனதாய்
உன் இதய ராணி வருந்துவாள்
"நமது வாரிசுகளின் வாயோரம் வாழ்க்கை சாரம்
எனது புன்னகை பூத்துள்ளதை
நாளும் காணவில்லையா நீ "
என்று சொல்......

உனது கனவுகளும் வலுவிழந்ததாய்
கழுத்தை சுற்றிக் கொண்டு
கண்ணீர் விடுவாள்.
"என்னைச் சூழ்ந்துள்ள
தோழர்களின் தோள்களில்
நாளும் செயல்வீச்சாக அவை இருப்பதை
உணரவில்லை நீ."
என்று நீ சொல்....

அன்றியும் இளமை மட்டும்
இன்னமும் இழக்காமல்..இளகாமல்
இருப்பது எப்படி என்பால்
உன்னை தன்னில் ஈர்த்தப்படி
உனது இல்லாள்
"எழுத்துக்களை நொடிதோறும்
நாள்தோறும் நான் காதலிப்பதை
நீ காணவில்லையா "
என்று சொல்...

"

எழுதியவர் : வீரன்தாமரை (2-Jul-13, 8:37 am)
பார்வை : 80

மேலே