மனிதக் களிம்பு பூசிக்கொள்...
உறக்க உலாவிற்கான
வீதிகள் அல்ல கனவுகள்:
கண் பதிவுகளின் விரி
விளக்கக் காட்சிகள் அல்ல கனவுகள்:
இராத்திரிகள் வேக வைக்கும்
பகலின் மிச்சங்கள் அல்ல கனவுகள்.....
சோம்பல் இருளழிக்கும்
வெளிச்சக் கீற்றுகள்.....!!
செயலாக்கப் பக்கங்கள்
தயாரிக்கும் அச்சுக்கூடங்கள்.....!!!
கனவில் வாழ்ந்துப் பார்
வாழ்க்கைப்புரியும்:
வாழ்வில் கனவு கண்டுப் பார்
முன்னேற்ற முகடு எளிதாகும்......
அன்றியும்
உனது முன்னேற்றத்தில்
மனிதக் களிம்பு கொஞ்சம் பூசிக்கொள்
காணும் கனவுகளில் வெளிச்சம் வீசும்...!!!!!!!