கிடைக்காதோ எம்மக்களுக்கு நீதி?(தாரகை)

.................போலி உறவுகள்.......................
அழகுதான் தூரத்துப் பச்சை
அடையத்தான் உள்ளத்தில் இச்சை
சென்றேன் அருகில்
கண்டேன் ஆசையில்
அழகில்லை அத்தனையும் கொச்சை.
........................................................................
.........................பெண்....................................
பெண்ணின் வாழ்வே சோதனை
பகிர்ந்திட முடியா வேதனை
யாருக்குத் தெரியும்?!
பாருக்குத் தெரியும்
வெட்டியாய்ச் செய்திட போதனை.
........................................................................
..........................சாதி......................................
கொட்டும் தேளாய்ச் சாதி
கேட்க இல்லையோ நாதி
விடம்விடக் கொடியது
உயிர்கள் மடியுது
கிடைக்காதோ எம்மக்களுக்கு நீதி.
........................................................................
............................வறுமை............................
வயிறு எரியுது வறுமையில்
வாழ்வு கரையுது வெறுமையில்
கொடுக்க மனமில்லை
பதுக்க இடமில்லை
செல்வந்தர் உள்ளமோ கயமையில்
..........................................................................
.........................இளமை..................................
இனிமையான இளமை வரம்
இதயத்தில் வேண்டும் உரம்
மொட்டு மலருது
கெட்டு அலையுது
இல்லையோ இவர்களில் தரம்
.........................................................................
............................தீவிர வதம்......................
அப்பாவி மக்கள் மேல் வெறுப்பு
அடிப்படை உரிமைகள் மறுப்பு
அநீதியாய்த் தீவிர வதம்
அதன்விளைவாய்த் தீவிரவாதம்
அறுபட்டுத் துடிக்குது உடல் உறுப்பு.
..........................................................................

எழுதியவர் : தாரகை (3-Jul-13, 7:42 am)
பார்வை : 228

மேலே