மங்கையர் குலம்காத்திடுவோம் !
மங்கையர் குலம் காத்திடுவோம் -மண்ணில்
மங்கயர்குலம்காத்திடுவோம் !
அன்பிற்கு ஊற்றாய்இருந்திவோம்
பண்பிற்கு நாற்றாய்இருந்திடுவோம்
உறவுக்கு துணையாய் இருந்திடுவோம்
பெருமைக்குப பெண்மையென உயர்த்திடுவோம் !
துக்கம் வரும் நேரத்தில்
பக்கத் துணையாய்நின்று
ஊக்கம் தந்திடுவோம் -வீர
மங்கைஎன வாழ்ந்திடுவோம் !
மூடத் தனங்களைகொளுத்திடுவோம் -பெண்ணைப்
பூட்டிவைக்கும் செயல் உடைத்திடுவோம்
விண்ணில் பறக்கும்
வீரமங்கை என
பண்ணைப் பாட்டிசைத்துப் பாடிடுவோம்