ஆத்திகமும் நாத்திகமும்
கடவுள் கருவறையினின்று,
ஏழையின் வயிறு போய்
சேர்வது
ஆத்திகமே...
ஏழையின் வயிறு தொட்டு,
கடவுள் மனம் பசியாற
காண்பது
நாத்திகமே....
ஆத்திகமும்,
நாத்திகமும்,
கடவுள் கருவறைக்கும்,
ஏழ்மையின் அடி வயிற்றிக்குமிடையே,
உசலாடும்
ஒரு மெல்லிழை காற்றையே.......

