அவசியம் புரியவில்லை

மாசற்ற
மிதிவண்டி விட்டு
உலகம் காக்கும்
ஓசோன் படலம்
ஓட்டையாக
மகிழுந்து
ஓட்டியாக
வேண்டிய
அவசியம் புரியவில்லை .....
இயற்கையை
சுரண்டி எரித்து
செயற்கை வாழ
வெப்பம் சேர்த்து
வெண் பனி உருக்கி
தட்பம் மாற்ற
வேண்டிய
அவசியம் புரியவில்லை....
பசு(ம்) உரம் இட்டு
வளர்த்த தானியங்கள்
ஒழித்து
விஷ உரமிட்டு
அறுத்த தானியங்கள்
உண்ண வேண்டிய
அவசியம் புரியவில்லை ....
மக்கிய குப்பைகள் தின்று
மலர்ந்து மணம் வீசிய
மண் ஒழித்து
மக்காத பாலித்தின்
பை பெருக்கி
மண் கெடுக்க
வேண்டிய
அவசியம் புரியவில்லை ....
இயற்கைத் தாவர
வண்ணமிட்ட
ஆடைகள்
தவிர்த்து
நீர் வளம் குடிக்கும்
வண்ண மாசுப்
பட்டறைகள்
அளித்த
ஆடைகள்
தரித்து வாழ
வேண்டிய
அவசியம் புரியவில்லை ....
மனித இனத்திற்கு
எத்தனையோ
நல்ல குணங்களை
அளித்த
இறைவன்
இயற்கையை
அழிக்கும்
இந்த குணத்தையும்
அளிக்க
வேண்டிய
அவசியம் புரியவில்லை ....