காட்டின் ராஜாவே - மான்களை ஏன் வேட்டை ஆடுகிறாய் ?

சிங்கம் டூ................!!!!!!!!

கவிதையும் படம் காட்டும் - அது
கருத்துடன் அரங்கேறும்........

நரசிம்ஹ அவதாரம்........அது
நாராயணத் திரு உருவம்.......

தங்க கிரீடம் கழற்றியதால்....
தலை முடி - பிடரிஎன....

கனிவுத் தோற்றமது கடவுளுக்கு
கம்பீரத் தோற்றமானது......!!!!

பசிக்கே அது வேட்டையாடும் அது
பணத்திற்காய் மனிதர் போல் அல்ல...!!!

கொல்வது அதன் குணமல்ல - அது
கொடுக்கப்பட்ட நியதியை கடை பிடிக்குது...!!!

அப்பாவி மான்களை அடித்துக் கொல்லுது - அந்த
அரி நம் அரசியலில் இருந்து இதை கற்றது.....!!!

மகா பாரத போரில்
மாண்டவர் அத்தனை பெரும் கொடியவர்களா ?

பாகவதம் சொன்ன கண்ணனே
பதில் சொல் என் கேள்விக்கு ?!!!

தர்மம் வெல்லட்டும்.....இனி
நல்லவர்களும் நலமுடன் வாழட்டும்....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Jul-13, 8:39 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 69

மேலே