குடிகாரன் பேச்சு!!
குடிக்கிறான் குடிக்கிறான்
கோட்டி வரக் குடிக்கிறான்
அழிக்கிறான் அழிக்கிறான்
அவனைத்தானே அழிக்கிறான்
ஆடி ஆடி நடக்கிறான்.
பாடி பாடி தொலைக்கிறான்.
நடக்கக்கூட கதியில்லாமல்
நடை பாதையில் விழுகிறான்
பாடு பட்ட காசையெல்லாம்
ஓடாக நினைக்கிறான்.
வீடு ஒன்னு இருக்குதான்னு
விலாசத்தையே கிழிக்கிறான்.
பெண்டாட்டி பிள்ளைகளை
போதையிலே மறக்கிறான்
கொண்டாடிக் கூத்தாடி
கோமணத்தை இழக்கிறான்
கிடக்கிறான் கிடக்கிறான்
கேவலமாய் கிடக்கிறான்
உயிரோடு பிணமாகி
ஊர் சிரிரிக்கக் கிடக்கிறான்
பித்தனாகித் திரிகிறான்
பிச்சை கூட எடுக்கிறான்
இருக்கும் வரை குடிக்கிறான்
இல்லாட்டித் திருடுறான்
சுத்தி சுத்தி மதுக்கடையை
சொக்கியங்கே படுக்கிறான்
உருக்கி உருக்கி உடலையே
ஒரு நாளில் தொலைக்கிறான்
நம்பி வந்த குடும்பமோ
நடுத் தெருவில் தவிக்குது.
தம்பி இவன் போலாரும்
தடமழியப் போக வேணாம்.
குடிகாரன் பேசும் பேச்சு
விடிஞ்சாலே முடிஞ்சு போச்சு.
உண்மையத்தான் சொன்னாலும்
உளறல் என்றே எண்ணுவார்
கொஞ்ச நேரம் உனை மறக்க
எஞ்சும் வாழ்வை சிதைப்பதோ!
குடிப்பதை விட்டு விடு
விடியலைத் தேடி எழு!
கொ பெ.பி.அய்யா.