கடி ஜோக்
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்..
"ஹலோ வணக்கம்"
"வணக்கம்...!!! சொல்லுங்க"
"வணக்கம்தான் சொல்லிட்டேனே. இன்னும் எத்தனை தடவை சொல்லுறது."
"அதில்லைங்க"
"எது இல்லை"
"சரி நீங்க எங்க இருந்து பேசுறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
"சினிமா பாட்டுதான்"
"சரி எந்த படத்துல இருந்து?"
"சினிமா படத்துல இருந்துதான்"
"ஐயோ"
என்று தலையில் அடித்துக் கொண்டு அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
நன்றி இணையத்தளம் (என்றோ சேமித்து வைத்தது தளத்தின் பெயர் நினைவில் இல்லை))