பாவம் மருத்துவர்

பயணிகளிடம் தன் நாட்டைப்பற்றி வெகுவாகப்
புகழ்ந்துகொண்டிருந்தான் வழிகாட்டி.

“எங்கள் நாட்டில் யாருக்கும் நோய் வருவதே இல்லை.
அதனால் யாரும் இங்கு இறப்பதே இல்லை!” என்று பெருமையாகச்
சொன்னான்.

அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே
தெருவில் ஒரு பிண ஊர்வலம் வந்தது.

“எவரும் இங்கு இறப்பதே இல்லை என்றாயே! இதோ ஒரு
பிண ஊர்வலம் வருகிறதே?” என்று இடக்காகக் கேட்டார்
சுற்றுலாப் பயணி ஒருவர்.

“ஓ! அதைக் கேட்கிறீர்களா? அவர்தாம் எங்கள் நாட்டிலிருந்த
ஒரே ஒரு மருத்துவர்! பாவம், வருமானம் இல்லாததால்
நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டார்!” என்றான் வழிகாட்டி.

எழுதியவர் : ஆர் கே ராஜ் (5-Jul-13, 10:19 pm)
சேர்த்தது : Rajavel Kaliyamoorthy
பார்வை : 151

மேலே