நகைசுவை துளிகள் பாருங்கோ ...!!!
“மன்னா, உங்களைப் பாட புலவர் வந்திருக்கிறார்…!”
“இப்போதுதான் மகாராணியிடம் பாட்டு வாங்கி வந்தேன்!”
“டாக்டர் ஹார்ட் ஆபரேஷனுக்கு எதுக்கு கோடாரி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க…?”
“நீங்க ஒரு கல்செஞ்சக்காரர்னு சொன்னாங்க…”
. “தலைவர் ஒரு துறவி மாதிரின்னு எப்படி சொல்றே?”
“ஆமா… நேர்மை, நாணயம், மனசாட்சி எல்லாத்தையும் துறந்துட்டாரே”
. “மன்னா! புலவர் எழுதிய பாட்டில் உங்களைப் புகழ்ந்து தானே இருக்கிறது. ஏன் கோபப்படுகிறீர்கள்?”
“அமைச்சரே! ஓலையின் கீழே பாருங்கள். ‘மேலே கூறியவை முழுக்க, முழுக்க கற்பனையே! யாரையும், எவரையும் குறிப்பிடுபவை அல்ல’னு எழுதியிருக்கே!”
. “அந்த பாகவதர் சினிமா ரசிகர்னு எப்படி சொல்றே…?”
“தகதிமிதா-னு பாடாம, ‘தகதகநமீதா’னு பாடறாரே…!”
. “நான் லவ் பண்றது தெரிஞ்சா, அப்பா என் கையில சூடு வைப்பார்!”
“இப்படி கூட செய்வாங்களா?”
“இங்க பாருங்க… ஏற்கனவே அஞ்சு தடவை சூடு வாங்கியிருக்கேன்!”
படித்ததில் பிடித்தது ....