நாடகம்

நாடகம்..
உனக்கும் எனக்கும் இடையே
நடக்கும் ஒரு சுந்தர நாடகம்

அதிலே..
நாயகி நீயானாய்
நாயகன் நானானேன்
நம் அபிநயம் யார்க்கும்
புரியாத ஒரு அற்புத நாடகம்

உன் ஓரக்கண் பார்வையிலே
ஓராயிரம் அபிநயம் நீ காட்டினாய்
அதில் தானோ என் இளமைக்கு
தினம் தினம் நீ உயிர் ஊட்டினாய்..?

காற்றிங்கே மேடையாச்சு
உன் கால் கொலுசொலியோ தாளமாச்சு
நட்சத்திரங்கள் நல்ல விளக்காச்சு
நிலவையும் தலைமையாய் வச்சு
நம் கண்களின் நடனம்
இங்கே அறங்கேறியாச்சு

விட்ட குறை தொட்ட குறையெல்லாம்
கூட்டிக் கழிச்சு சொல்லிவிடு நல்ல பதில்
நம் நாடகம் தொடங்கி ரொம்ப நாளாச்சு.

எழுதியவர் : சங்கை முத்து (6-Jul-13, 7:17 pm)
சேர்த்தது : Sangai Muthu
Tanglish : naadakam
பார்வை : 112

மேலே