ஓரறிவுமற்ற ஆறறிவுக்கூட்டம்

எங்கும் எதிலும் நேர்த்தியான
எறும்புகளின்......
தோன்றிய காலம் முதல்
தன் கூட்டம் நீங்காத யானைகளின்.....
கடுகளவு உணவையும்
கரைந்துண்டு வாழும் காகங்களின்.....
முப்பொழுதும் முனைப்பொடு
உலவும் முஞ்சூருகளின்.......
வாழும் போதும்
வீழ்ந்த பின்னும்
வீணாகாத கறவையினங்களின்.....
இனம் பார்க்காமல்
இளைப்பாற்றும் மரங்களின்......
ஓரறிவுமற்ற ஆறறிவுக்கூட்டம்-மனிதன்