சிறுவர் சிலேட்டில் ஓவியங்கள்
சிந்தனையின் இசை வடிவங்கள்
சிறுவர் சிலேட்டில் ஓவியங்கள்
விரலிடை சாக்பீஸ் ஆறாம் விரலாம்
வியக்கவே இயற்றுது அழகிய கவியாம்
ரசனைகள் என்பதை விழிகளும் பயிலவே
ரங்கோலி வண்ணங்கள் வெண்மையாய் தெரியுதே
மழலையே அழிக்காதே மலர்ந்த பூக்கள் மணக்கட்டும்
மகிழ்விலே என் மனம் அது கண்டே மகிழட்டும்.....!!!!

