கொள்ளைப் போகும் நெஞ்சம்
வெண்பனி படர்ந்த மேற்கூரை
வெள்ளை உடைதரித்த மலை
கொள்ளைப் போகும் நெஞ்சம்
கொஞ்சம் அருகில் சென்றால் !
இயற்கையாய் அமையும் அழகு
செயற்கை செயலால் கிட்டாது !
துள்ளி விளையாடும் உள்ளம்
அள்ளிப் பருகலாம் அழகினை !
நீரின் அருகே உள்ளதால் நமக்கும்
தண்ணீர் பஞ்சம் என்று வராது
நதிக்கரை என்பதால் நமக்கும்
சுனாமி ஆபத்தும் இருக்காது !
(எல்லாம் ஒரு நம்பிக்கைதான் நமக்கு
சென்றால்தானே விளங்கிடும் உண்மை )
பழனி குமார்