கவலையற்ற வாழ்வு.?

கட்டிலுக்கடியில் பெட்டியிலிட்டு
ஒளித்துவைத்த சாக்லேட்
எறும்புகள் தின்றுவிடுமோ..?

வீட்டுப்பாடம் செய்யவில்லை
வகுப்பு டீச்சர் அழைத்து
செமத்தியாய் அடிக்குமோ.?

இன்றைக்காவது
நான் கேட்ட பொம்மையை
அப்பா வாங்கி வருவாரா..?

நம்மைமட்டும் விட்டுவிட்டு
அம்மத்தா ஊருக்கு
அம்மா சென்றுவிடுவாளோ.?

போகோ சேனலில், பீம்பாயைக்
கட்டிவைத்த திருடன்
அவனுக்கு லட்டு கொடுப்பானோ..?

இப்படியாக..
எனக்குமுண்டு ஆயிரம் கவலைகள்..!

கவலையற்ற வாழ்வு குழந்தைகளுடையது
என்று யார் சொன்னது.?

எழுதியவர் : ஆனந்த ஸ்ரீ (11-Jul-13, 12:24 pm)
பார்வை : 216

மேலே