இது அப்பாவுக்காக
இது அப்பாவுக்காக
பொம்பளபுள்ள
பொரந்திருக்கு என
சொந்த பந்தம்
சங்கட்டப் பட
என் அழு குரலை
கேட்டு ஆனந்தப்பட்ட
ஒரு ஜீவன்
"அப்பா"
நான் எட்டி உதைத்ததையும்
கட்டி புரண்டதையும்
ஆனந்தமாய்
தாங்கிக் கொண்ட
நாயகன்....
எனக்கான நிமிடங்கள்
ஒவ்வொன்றும்
அவரது வாழ்க்கை..
என் பிறப்பு முதல்
நான்வயதுக்கு வந்த
பிறகும்
என்னை கட்டி
அனைத்து முத்தமிடும்
அன்பிற்குரியவன்
"அப்பா"
அப்பாக்களை நேசிக்கும்
மகள்களுக்கு
மட்டும் தெரியும்
முத்தம் காமத்தில்
சேராத காதலின்
பரிசு என்று.
அப்பாவை இழந்த மகளுக்கு
அப்பாவை காதலிக்கும்
மகளுக்கும்
மட்டும் தெரியும்
அப்பாவின் வாழ்க்கை
எனக்கானது என்று...