ரிலாக்ஸ் ப்ளீஸ்...
----------------------------------------------------------------------------
டாக்டர் : தினமும் காலையில வெறும் வயித்துல அரை மணி நேரம் நடந்தா உங்க வெயிட் குறைஞ்சிடும்.
பேஷண்ட் : யார் வயித்துல டாக்டர் நடக்கணும்? ...
----------------------------------------------------------------------------
டாக்டர்,எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு...
டாக்டர் கிட்ட சொல்றதுக்கு என்னம்மா கூச்சம், தயங்காம சொல்லுங்க...
அட நீங்க வேற டாக்டர், எனக்கு பல்லு கூச்சமா இருக்குனு சொன்னேன். ...
----------------------------------------------------------------------------
வீட்டு ஓனர் : வாடகையை எப்ப சார் தருவீங்க? குடியிருப்பவர் : சம்பளம் வாங்கினதும் தந்துடுறேன்ங்க... வீட்டு ஓனர் : அப்படியா... அப்போ உங்களுக்கு எப்போ சம்பளம் போடுவாங்க...?
குடியிருப்பவர் : என்ன சார், சின்னப்புள்ளத் தனமா கேக்குறீங்க. வேலை கிடச்சா தானே சம்பளம் கிடைக்கும்... ..
----------------------------------------------------------------------------
கணவன் : நா ரோட்ல போகும் போது, என்னை பாத்து போலீஸ்னு நினைச்சு எல்லாரும் பயப்படறாங்க தெரியுமா?
மனைவி : தொப்பையைக் குறைங்கனு சொன்னா கேட்டாதானே நீங்க... ...
----------------------------------------------------------------------------
பரவாயில்லையே, ஏதாவது பிரச்சினை வந்தா உன் பாஸ் ஐ டோண்ட் மைண்ட்னு சொல்றாரே...
அட நீ வேற, அவருக்கு மூளை இல்லைங்கறதைத் தான் இப்படி சிம்பாளிக்கா சொல்றாரு... ...
----------------------------------------------------------------------------