கண்ணாடிக்குடுவைகள்
கண்ணாடிக்குடுவைகள்
கூவிய சந்தையின்
குத்தகை தாரங்கள்
அழக்குடம் இரசித்திடும்
நாட்டாமை தனித்துவம்
ஏலமெடுக்க ஒருவன்
ஏப்பம் தெறிக்க ப(ண)லப்பேர்
அனுபவஸ்த்தன் வாழ்க்கை
அதிலே தொடங்குகிற
அந்தரங்கக் கோள் அதிகாரம்
கவிதைப் பிறக்கிறதாம்
சுரக்கின்ற விந்து
அடைப்படும் அண்டப்பந்தில்
மறுக்கப்பட்ட பிணங்கள்
அழுகி நாறுகிறது
இங்கே அனுமதித்தப்
பிணங்களோ அழுக்கில் நாறுகின்றன
மழைவரும் சாக்கில்
இருள்குடைப் பிடிக்கும்
அற்ப நாய்களின் மோகப்பிரசங்கம்
எள்ளித் துளிக்கின்ற
இருதொடை இடுக்கில்
ஜாதியில்லையாம் பேதமில்லையாம்
அஞ்சி அஞ்சி அவளுடைத்த
அழிகரு முட்டைகளின்
எண்ணிக்கைதான் எத்தனையோ
முளைப்பிலோ பிறப்பிலோ
முகவரியிருந்தவள்
முழுவதும் பெற்ற
சான்றிதழ் வரிகளால்
வாடகைக்கு வாடினாள்
சிறுமையளென மாறி,,,
ஈரைந்து மாதங்கள்
வாரித் தெறித்திட்ட
ஆகமப் பாவத்திற்கின்று
முதலெழுத்தென்னவாம் பிதற்றுகிறாள்
அமிசுகம் அமைந்திடா
அமறலென மார்த் தெரிய
அமளிக்கு வித்திடுகிறாய் அழலிறைக்க
தோறை என அழலுகிறாய்
தொட்டுவிட மட்டும்
தேரையாகிறாய் மயல்கொண்டிடத்தாவி
ஆதங்க மேடையில்
அ(ன)ர்த்தங்கள் பலவாரி
அவ்வியம் போதித்துவிட்டு
அழிபசி தீர்க்க
அந்தரகஞ் சூழவோர்
அழிதகைச் செயலாற்றல்
புறங்கொல்லைச் சுவர்த்தாண்டி
பின் கதவம் தடதடக்கும்
அமரிறை அவதாரமாற்றம்
மூர்க்கங்கள் புதைத்து
வியர்வைக் குளித்து
சமத்துவம் தேடிடும்
"அவிசாரி" அந்தப்புரம்
அவிழகம் அவிழ்ந்தும்
அனந்தற்றழுவியும்
அவனிகை விலக்கி
சைனியம் ஏற்றினாள்
அவுணர்க ளென்றும் பாராது
தேவிதானவள் ,,
தினராத்திரி நீ வரைந்த
மீள்மப்பட்டை புறக்கோலங்கள்
பெண்ணெனப் பாராமல்
ஆண்பிள்ளை வாதத்தின்
அந்நேர வலிப்புகளின்
தினவெடுத்தத் திமிர்முன்னே
அவள் ஆக்கையுமொரு விக்கிரகந்தான்
அனுசரன்