+இரவுப்போர்வை!+

இரவுப்போர்வை
வெளிச்சப்பெண் மேலே
மெதுவாக
போர்த்தப்பட்டது...

உடனே
சின்ன சின்ன
வண்ண விளக்குகள்
வானில்
போடப்பட்டது...

வெளிச்சப்பெண்
போர்வைக்குள்
உறங்காமல் படுத்திருந்தது
யாருக்கும் தெரியாது!

மெதுவாக
வெள்ளை நிற விளக்கொன்று
மிதந்து வந்தது!

வெட்கப்பட்டுக்கொண்டே
வெளிச்சப்பெண்
மெல்ல
எட்டிப்பார்த்தாள்!

மரத்திலே அமர்ந்திருந்த
அம்மா பறவைகள் சேர்ந்து
அமைதியாக தாலாட்டு பாட
குட்டி பறவைகளோடு சேர்ந்து
மரமும் தூக்கம் போட்டது..!

சத்தம் போடாமல்
நாமும் மெல்ல
விலகிச் செல்வோம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Jul-13, 12:27 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 96

மேலே