இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை.....!!!!

கண்ண பிரானின் வேணு கானம் - அது
கவிதை தமிழில் நமது பேச்சு......
கருத்தாய் இசைப்போம் காலம் முழுதும்
காலம் எல்லாம் தமிழே வெல்ல.....
சொல்லும் சொல்லில் தமிழே இருந்தால்
சொர்க்கம் அருகில் வந்திடுமே - இனி
செல்லும் திசையில் தமிழே சொல்வோம்
செந்தமிழ் மேலும் வளர்ந்திடவே.....!!!!