இடைப்பட்ட தருணம்

சிந்தனை
வரப்போகும் நாட்களின்
வசன ஒத்திகை;
வந்து சென்ற நாட்களின்
ஏக்கப் பெருமூச்சு.
இடைப்பட்ட தருணத்தில்
சத்தமின்றி ஊர்ந்து செல்கிறது, வாழ்வு -
கன்னி கழியாமலே!

எழுதியவர் : கோ. ஶ்ரீகாந்த் (13-Jul-13, 7:18 am)
சேர்த்தது : Srikanth Govind
பார்வை : 1125

மேலே