வாழ்வோம் துணிந்து வா

காலம்..
நாலு கால் வாகனம் போலே
என்னை கடந்து போகுது
காத்திருப்புகள் ஒவ்வொன்றும்
நீரில் எழுதியது போலே
மறைந்து போகுது

யார் யாரோ என் வாழ்வில்
வந்து போயிருந்தாலும்
நீ மட்டும் என் நெஞ்சில்
முழு நிலவாய் நின்று போயல்லோ

செவ்வாய் தோசம் உள்ள பெண்ணை
கெட்டியவனுக்கு மரணம்
கணவனை இழந்தவள் மூலி
என்றெல்லாம் சொல்லி
நமக்கு போடுவார் வேலி

இந்த ஜாதி மதம்
ஜாதகமென்னும் சாக்கடையில்
நீயுமா இன்னும் வீழ்ந்து கிடக்கின்றாய்
இதெல்லாம் நமக்கு மரணம்
உண்டென்று சொல்லும்
ஆனால் மரணத்தை தடுக்குமா..?

எல்லாவர்க்கும் மரணம் நிச்சயம்
வாழ்வோம் துணிந்து விடு
காலத்தை
வெல்வோம் கவலை விடு.

எழுதியவர் : சங்கை முத்து (13-Jul-13, 7:54 am)
பார்வை : 621

மேலே