இறைவனின் கவிதை...
நீலவான ஏட்டில்
நிற்காத மேகங்களாய்,
நிலவாய் விண்மீன்களாய்
அழகுக் கவிதை
அந்தரத்தில் படைத்த இறைவன்,
மண்ணில் எழுதிய கவிதையை
மரமாய். செடியாய்,
மலராய்
மலையாய் மடுவாய்
மங்காத பேரழகையெல்லாம்
பகலொளியில்
பளிச்செனக் காட்டுகிறான்...!