ஆர்.எஸ்.எஸ். விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங் தள் ஆகிய இயக்கங்களை தடை செய்ய வேண்டும் - மாயாவதி..!
சமீபத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் ஜாதி ரீதியான ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிற்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்து உத்தரவு போட்டுள்ளது..
உ.பி. யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர் தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர் ஜாதியினர் ஆன பார்ப்பனர்களின் ஊர்வலத்தை நடத்தினர். ஜாதி ரீதியில் உ,பி.மக்களை திரட்டி தங்களுக்கு அதாரவாக செயல்படுமாறு ஊக்குவித்து வருகின்றனர். ஒருபுறம் முலாயம் சிங் மறுபுறம் காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற கட்சிகளும் ஜாதி ரீதியாக அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன உ.பி.மாநிலத்தில்...
இந்நிலையில் தான் சுப்ரீம் கோர்ட் ஜாதி ரீதியான கூட்டங்களுக்கு ஊர்வலங்களுக்கு பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவு போட்டுள்ளன....இந்த தடை உத்தரவு மாநிலக் கட்சிகளுக்கு பெருத்த அடியாக கருதப்படுகின்ற நிலையில் தான் மாயாவதி அவர்கள் இந்த கருத்தை வலியுறுத்தி உள்ளார்.
அதாவது மத ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். விஸ்வ ஹிந்து பர்சத் மற்றும் பஜ்ரங் தள் போன்ற மதவாத, இந்து அடிபப்டை வாத கட்சிகளை இயக்கங்களை ஏன் தடை செய்யக் கூடாது என்று கேட்டிருக்கிறார்.
இந்த இவரின் தடை குறித்த பேச்சுக்கு உ.பி.யின் பாஜக செயலாளர் லக்ஷ்மி காந்த் பாஜ்பாய் கொதித்து போய் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ஆக, பாசிஸ்ட் இயக்கங்கள் ஆன இந்த மூன்றையும் தடை செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை மிகவும் துணிச்சலாக வெளியிட்ட மாயாவதி அவர்களை பாராட்டமால் இருக்க முடியாது என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!
சங்கிலிக்கருப்பு