எப்படி விடுவேன் உன்னை ...!!!

தேன் சுரப்பது ...
மலரில் மட்டுமல்ல....
உன் சிரித்த உதட்டிலும் ...
தான் ....!!!
மின்னல் அடிப்பது ,,,
வானத்தில் மட்டுமல்ல ..
உன் கன்ன குழியிலும் தான் ...!!!
மகரந்தம் இருப்பது ..
பூக்களில் மட்டுமல்ல ..
உன் கருவிழியிலும் தான் ...!!!
இத்தனையும் ஒரு இடத்தில் ..
இருப்பது உன்னிடம் தான் ..
எப்படி விடுவேன் உன்னை ...!!!