முதல் பார்வை...

முதல் பார்வையில் விழிக்கும் விழிக்கும் மோதல்
முளைவிட்டுப் பார்க்கிறது ஒரு காதல்...!
காதல் தீப்பொறி பற்றிக்கொண்டது - என்
இதயக் காட்டில் எங்கும் தொற்றிக்கொண்டது...!
காதல் மேகம் உருகியது - என் உள்ளம் எனும்
பள்ளத்தில் வெள்ளம் பெருகியது...!
காதல் எனும் காற்று என்னை கிள்ளியது-பின்
அதுவே புயலாக மாறி எனைத் தள்ளியது...!
காதல் காய்ச்சலால் கொதிக்கின்றேன் - உன்
பார்வை மருந்துக்காய் தவிக்கின்றேன்..
உன் கொஞ்சும் நினைவுகளால் நெஞ்சம் நிறைகின்றேன்...
கொஞ்சம் உன் உள்ளத்தில் தஞ்சம் கேட்கின்றேன்...