எப்போது மாறுமோ....
பக்தியில் ஊர்வலம் போன காலம் போய்..
இப்போதெல்லாம் போதையிலும் ஊர்வலம் போகிறார்கள்....
மயிலாட்டம் தானே முருகனுக்கு பிடித்தது...
இவர்கள் தெருவில் ஆடுவது என்ன ஆட்டமோ தெரியலையே...
முருகனுக்கு பாலபிஷேகம்....
தெருவில் சில மூடர்களுக்கு 'பீர்-அபிஷேகம்'...
ஏதேனும் குடத்தில் பாலுக்கு பதிலாக...
'பீர்' வந்திடுமோ என்ற அச்சத்தில் முருகன்....
எப்படியோ நாமும் இந்த அவலங்களுக்கிடையே...
வாழ கற்றுக்கொண்டோம்...
காலம் காலமாய் முருகனும்...
கல்லாகவே இருக்க பழகிகொண்டான்...
இங்கே மாற்றம் என்பதை கொண்டுவர...
எவருக்கும் சக்தியில்லை....
நாம் வணங்கி வரும் முருகன்...
சத்தியமாய் வரப்போவதில்லை....