பெயர் பஞ்சம்....
தமிழ் புத்தாண்டு எதுவென்று பட்டிமன்றம் செய்கிறார்கள்....
தமிழர் உரிமைக்காக குரல்கொடுக்கிறார்கள்...
தமிழ்ப்பள்ளிகளுக்கு சேவையாற்ற முன்னிற்கிறார்கள்...
எல்லோரும் நல்ல தமிழ் பிரியர்கள்தான்...
மானமுள்ள தமிழர்கள் தான்...
ஆனாலும் பாவம்...
பெற்ற பிள்ளைக்கு பெயர் சூட்டும்போது மட்டும்...
மானம் கெட்டு வாயில் நுழையாத...
ஏதோ ஒரு பெயரை..
வைத்து தொலைக்கிறார்கள்....