வாழ்க்கை பாடம்
அந்தி மாலை
லேசான தூறல்
பலமான சாரல்
காதுமடல்களை
வருடும் தென்றல்
ஆர்ப்பரிக்கும் கடல்
ஏழு நிறங்களின்
ஏகாந்தமாய் வானவில்
காட்சி பிழையாய்
தூரத்து பிம்பம்
கானம் படும் குயில்
காலை தொடும் அலை
இவை அனைத்தோடும்
ஒற்றை குடையில்
கற்றை பூக்களோடு - நான்
இவை எதுவுமே
என்னை சலன படுத்தவில்லை
ஏன்?
சட்டென்று நிறுத்தினேன்
ஒரு புள்ளியில் என்
நினைவுகளை...
வாழ்க்கையை விட
வறுமை நிறைய
பாடங்களை சொல்லி
தந்து விட்டது...
இதில் எங்கே என் மனம்
ரசனையை நோக்கி
செல்லும் என ...
சமர்பித்தவர்,,,
ஆனந்தி.ரா