மெழுகுவர்த்திகள் தேவை...

நரகாசுரனைக் கொன்றதோடு சரி...
நாகரிக உலகில் நூற்றுக்கணக்கான அசுரர்கள் இருக்கக்கண்டு...
ஆண்டவனே அச்சப்பட்டு
அவதாரம் எடுப்பதை நிறுத்திவிட்டான்....

ஆனாலும் நாம் தீபங்கள் ஏற்றி...
தவறாமல் கொண்டாடுகிறோம்...
தீப திருநாளை...

இங்கே இருளை வெல்ல ஒளி வேண்டுமென்று....
பிராத்தனைகள் செய்கின்றோம்....
ஆனால் மெழுகுவர்த்தியாய் எரியத்தான்....
யாருக்குமே இஷ்டமில்லை...

எழுதியவர் : துளசி தாசன் (16-Jul-13, 7:28 am)
சேர்த்தது : sharala
பார்வை : 94

மேலே