முகம் மலரும் நட்பு !
சான்றாண்மை உடையோர் சிறிதும் குறையின்றி
thondraa எழுவாய்போல் இலக்கணமாய் வாழ்வார்
பகைமை உடையவரால் பொல்லாங்கே விளையும்
புகைக்கண்ணைஎரியுட்டல் போல பகைவர்
எல்லாம் அழைக்கழித்துத் துன்பம் செய்வாரப்
பொல்லாப் பாவிகளை புறந்தள்ள வேண்டும் மொழியைச் சிதைப்பவன் மூடன் என்றல்
வாழ்வைக் கெடுப்பவன் வஞ்சகன் ஆவான்
உற்றுழி உறுபொருள் திருடும் கயவன்
பிற்றை நாளில் பாழாய்ப் போவான்
தீய குணத்துடன் திசையெட்டும் வலம்வருவோன்
தூய மனத்தை துன்புறுதிடுவான்-வஞ்சக
எண்ணத்தில் முழ்குபவ்னோ என்றும் கரைஎரான்
திண்ணமிது திண்ணம் திருக்குறள் தரும் நீதி
அழுகிய பழம் போல் அகத்தில் பகை வைப்போன்
தொழு நோய் தாக்கி உறுப்பு குறைபடுவான்
இமைப்பொழுதும் பிறர்நலம் நினைப்பவர் இல்லம் கண்
இமையாதார் வாழும் இன்பமான செல்வம்
சந்தனம் தேய்ந்தாலும்னருமணம்தந்திடுமே
சிந்தனைத் தூய்மையால் சிரமங்கள் பறக்குமே
முகம் மலர நட்பு கொள்பவர், மகிழ்பவர்
அகம் மகிழ்ந்து அன்பாவர் அருமைப் பண்பினர்
நன்மையே விளையும் நயத்தகு நண்பரால்
உண்மை இது உணர்த்திடும் உலகப் பொதுமறையே !!