ஆக்கிரமிக்கும் சாபம்

என் தவத்திற்கு
ஏதுவான இடம்
தொலைகிறது
தவமும்
தனது வருகைக்கான
வழியின்றி
முடங்கித் தவிக்கிறது
தவம் தந்த
கவிதைப் பறவைகள்
விசனத்தை தின்கிறது
கற்பனைப் பறவைகளின்
கூடுகளும்
கலைந்து கொண்டிருக்கிறது
மனதிற்குத் தீனிபோட்ட
பசுமையானது
எண்ணங்களை எரிக்கப்
பரிசாக.,
மரங்களை
விறகாக்கித் தந்து
அழிகிறது
அரிதாய் தோன்றும்
கானல் நீரானது
எங்கும் பரவி மிதக்கிறது
வனங்களின் ஆவியாய்
நான் தொட்டிலாட
கிளை நீட்டிய மரமும்
அற்ப ஆயுளில் மாய்கிறது
நகர விரிவாக்கத்தில்
எனது தவம் வளரும்
கானகங்களில்
செழித்த என்னையும்
முளைத்த
எழுது கோல்களையும்.,
நசுக்கிச் செல்லும்
லாரிகளின் அணிவகுப்பு
தொடர்கிறது...
மரங்களை
ஏற்றுவதற்கும்
அளவு கற்களை
இறக்குவதற்கும் !