ஒரு கோப்பை காதல்..!!

நீ உறங்க விடாத -
என் இரவுகளை,
உறங்க விடாமலேயே
ரசிக்கிறேன்..!!

நதியில் தேடிய
தீயாகவே
நீ இருந்தாய்..!!

ஒரு போதும் உதிராத
விழிப்பூ நீயடி..!!

காலம் துடைத்து விட்டு போன
இளமையடி நீ..!!

பனித் துளியில்
விழாத வானம் நீ..!!

கடல் நீரில் தென்படும்
கானல் நீ..!!

இலையோடு அசைந்து கொண்டிருக்கும்
காற்று நீ..!!

விலகிச் சென்ற
வீணையடி நீ..!!

நெருக்கத்தில் திணறிப் போகும்
காற்றும் நீயடி..!!

உன் மேல் விழுந்த பூவை விடுத்து,
உனைத் தேடி அலையுது சிட்டுக் குருவி..!!

நீ தீண்ட,
புகை கண்டு ஓடும்
பெருச்சாளி ஆனேன்..!!

எழுதியவர் : விக்கி பிரசன்னா (16-Jul-13, 4:03 pm)
சேர்த்தது : vikki prasanna
பார்வை : 74

மேலே