வேண்டுவேனுனை

கவனச் சிதறலில்
கழியாத நிமிடங்கள் வேண்டும் ;

காரிருள் சூழ்ந்தாலும்
வேண்டுவது காணுங்கண் வேண்டும்;

உய்யும்சுகம் உடன்
உதறிஎழும் மனம் வேண்டும்...!

வறண்ட தேசத்தில் வாசல்
நனைக்கவேணும் பெய்யும் மழை வேண்டும்

நிறைந்த சுதந்திரத்தில்
நிறுத்த வாழ்வு வேண்டும்

கொண்டகடமை
முடித்தபின் கண்ணயர வேண்டும்

கருத்த மேகம் பிழிந்த வானம்
காட்டுந்தெளிவு முகத்தில் பெறவேண்டும் ...!

முடியாதவொன்றை
முழுதாய் முயற்சிக்கையிலது
முடியாதெனத் தெரியாத அறியாமை வேண்டும் ..!

நட்பு பொறாமை கொளாத,
துரோகியிடம் தோற்காத வெற்றி வேண்டும்...!

ஆயிரம் சிக்கல்களை அறுத்தெறிந்து
விட்டமர்கிற ஆன்ம அமைதி வேண்டும்...!

உறவுகளுக்காக
உழைக்கிற கைகள் வேண்டும் ;

உனைத் தவிர எவரிடமும்
வேண்டுமென வேண்டாத மனம் வேண்டும் ..!

இறைவா ........!இறைவா ........!இறைவா ........!

எழுதியவர் : நிலாநேசி (16-Jul-13, 11:58 pm)
சேர்த்தது : நிலாநேசி
பார்வை : 61

மேலே