கன்னியே...!
கலங்கி நிற்கும் கண்ணில் கரையதவனா????
கவிழ்ந்து விழும் நீரில் கரைவான்!!!
கன்னியே கண்ணீரில் உன் கண்ணனைக் கட்டயிலாது...!
கலங்கி நீ கைபற்றுமவன் காகித மலர்ப் போன்றவன்
சிரிப்போடு விட்டுப் பார் அவன் சிந்தனையிலும் செந்தேனயிடுவாய்...!
சேர மறுத்தவன் மனமும் சாகும் – முன்னும்
உன் முகத்தை அலசியெடுத்து முத்தமிட்டே மூர்ச்சையுறும்…!
மூழ்கிவிடும் படகல்ல நீ, மிதந்து வரும் விறகு
முயன்ற வரை உறவுகளை சிறகு விரிக்க செய்திடு
தூர தேசம் சென்றாலும் துடிக்கும் உன் இதயோசை இழுத்து வரும்...!
இருநூறு ஜென்மங்கள் இமை பிரியாது வாழ...!