மௌனம்

வார்த்தைகளை இளைப்பாற செய்யும்
பெண்ணே நீ என்
வசந்தத்தை இரையாக்காதே!!!

உனக்கென்ன தெரியும்
இங்கே என் இதயகூட்டின்
இழுபறி விசையை ???

கண்ணசைவில் கவிபாட
தெரியும் பெண்ணே ஆனால்
சந்தம் உன் வார்த்தைதானே!!?

சிறகொடிக்க வேறொரு
ஆயுதம் இல்லை உன்னிடம் ???
ஊமை மொழியால் என்னை கொய்தாய்...

எத்தனை ரசமாய்
வார்த்தை இருந்தும் ஊசி
முனை விஷமாய் ஒன்றை விதைத்தாய்..

இறுதி துளியாய்
வற்றும் என்குருதி தெருவில்
ஓர்விடை சொல்லடி இல்லை விடை கொடடி...

எழுதியவர் : சுபகூரிமகேஸ்வரன் (எ) skmaheshwaran (17-Jul-13, 1:29 pm)
சேர்த்தது : எஸ்.கே .மகேஸ்வரன்
Tanglish : mounam
பார்வை : 123

மேலே