அர்ஜுன் சம்பத் கைது...? பாசிஸ்ட்கள் பகிரங்கமாகவே வருகிறார்களா..?

நெல்லையப்பர் ஆலயம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் இந்து மக்கள் கட்சியினர் சுமார் 15 பேர்களுடன். முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டார்கள்.

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு தலைமை தாங்கும் உதயகுமார் மற்றும் புஷ்பராயன் போன்றவர்களை கைது செய்ய ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

உலகெங்கும் அமேரிக்கா தொடங்கி ஜப்பான் வரை சமூக ஆர்வலர்கள் மற்றும் கிரீன் பீஸ் இயக்கத்தினர் என்று அனைவருமே அணு உலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், இந்து மக்கள் கட்சியினர் அரசின் கூலிப்படையைப் போன்று அல்ல கூலிப்படைகளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்..

அணு உலையில் இருந்து மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்கிறோம் என்று அப்பட்டமாக பொய் சொல்லிவரும் அரசும் அரசின் ஊடகங்களும் ஒருபுறம் இருக்க, மறுபுறமோ மத அடிப்படைவாதிகள் போராடுபவர்களை ஒடுக்க வேண்டும் என்று எதிர் போராடுவதைத் தான் பாசிஸ்ட்கள் பகிரங்கமாகவே வருகிறார்கள் என்று கூறலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (17-Jul-13, 1:44 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 58

மேலே