Punnagai
இனியவளே....!!!
"ரெட்டைசடை பின்னுக்கு தள்ளி
தூக்கி சொருகிய ஒற்றை பட்டுபாவாடையில்
தேவதையாய் ஜொலிக்க ".....
முகத்தில் துள்ளி விளையாடும் உன்
குழந்தை புன்னகயிலா .....!!!!
"உயிர்ப்பூவின் மொட்டு மலரும் உன்னதமான
தருணம் ....
தனிமையை தோழியாக்கி
பச்சை இளங்கீற்றின்
ஒற்றை மறைவில் அமர்ந்திருக்க "....!!!!
அழகாய் இதழ்சிவக்கும்
உன் மௌனபுன்னகயிலா......!!!!
"கணவனை கைபிடித்து பள்ளியறை
புகும்வேளை ...
மலர்கள் சிதறிய மஞ்சத்தில் உள்ளம்
திசை மாறும் ...
அங்கே சுவாசம் தடுமாற
நாணம் தடம்மாற
மறுகை அணைக்க தன் இரு கை எடுத்து
முகம் மறைக்கும்" ....
"உன் மோக புன்னகயிலா"....!!!
பிஞ்சு மழலையின் நெஞ்சம் உறவாடும்
சத்தம் சொல்ல .....!!
மெல்ல என் காதோடு வருடும்
உன் சுவாச புன்னகையிலா.....!!!
இப்படி உயிர்த்தெழும் புன்னகைகள்
உறவாட கண்டேன்
உன் ஒவ்வொரு பருவத்திலும் .....
ஜீவனாய் உதித்து
ஜீவனை உதிர்க்கும் உன்
ஒவ்வொரு தருணத்திலும்
உன புன்னகையை தொடர்வேன் .....
என் ஜீவன் முடியும்வரை .....!!!!!
" தோழனாக காதலனாக கணவனாக "...!!!!!.....

