என்னைப்பற்றி நானே.....!!!!
இது தான் நான் என்று
சொல்ல முடியவில்லை,
இப்படி தான் நான் எனவும்
விளக்க முடியவில்லை..!!
என்னை நானே முதுகில்
தட்டி கொடுக்கவும்,
முகத்தில் எச்சில் துப்பவும்
செய்திருக்கிறேன்..!!
கண்ணாடி பார்த்து கதறி
அழுதிருக்கும் நானே,
உலகிற்கு கல் நெஞ்சம் கொண்டவனாய்
தெரிந்திருக்கிறேன்...!!!
மகிழ்ச்சியாகவே இருப்பது போல்,
நடிக்க கற்று கொண்டதால் என்னவோ,
என் சோகம் கூட எப்போதும்
பொய்யாகி விடுகிறது..!!
எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள
ஆசை வந்த பின்னரே,
எதெயெல்லாம் இழந்தேன் என
தெரிந்து கொண்டேன்..!!
மனதுக்கு பிடித்தவர்களிடம்
அளவுக்கு மீறிய புரிதல்களும்,
எல்லை கடந்த பாசமும்,
ஒருநாள் தீவிரவாதம் ஆகுமென
கண்டு கொண்டேன்..!!
சில நேரங்களில் என்னை நிரூபிக்க
எதுவும் தெரியாதது போல்
சுலபமாய் காட்டினேன்,
எல்லாம் தெரிந்தது போல்
மிகவும் கடினமாய் நடித்தேன்..!!
என் வாழ்க்கையில்
பாதி முடிந்த பின்னரே
தெரிய வருகிறது,
பிரச்சனையின் காரணிகளே
அதன் தீர்வாகவும் இருக்கிறது..!!!
மூட்டை நிறைய கனவுகளும்,
மூச்சு முட்ட வரும் ஆசையும்,
எதற்கவோ பொங்கி வழியும் கோவமும்,
இன்னும் எத்தனை எத்தனையோ
ஆயிரம் அழிக்கமுடியாத சுவடுகள்
எனக்குள்ளும் இருக்கிறது..!!!
இருந்தாலும் எனக்கு பிடித்த ஒருவனாக,
நானே இருப்பது
எனக்குள் என்றும் இன்பமே...!!!