இதம் தரும் நட்புக்கு இணை என்று சொல்ல ஏதும் இல்லை!!!!!
தீயே வந்து என் நெற்றியில்
திலகம் இட்டதே! இதுவரை
தீண்டாத துன்பம்
என்னை தீண்டி விட்டதே..
வாழ்வில் துயரங்கள்
உருவாகும் வியப்பில்லை
துயரமே வாழ்வானதே...
மேகத்திற்கு எடையில்லை இருந்தும்
நிறையென்று ஒன்று உண்டல்லோ?
என் சோகத்திற்கும் எடையிருக்க வில்லை
இருந்தும் நிறை நிறையவே இருந்தது
என் நண்பர்களாய்...
தோழமையை உயிராக நினைத்தேன்
பிரிந்தான் என் தோழன்
என் பள்ளி பருவத்தில்...
திக்கெட்டும் மூடி
திசை தெரியா பறவை ஆனேன் நான்!!
பிரிந்து போன அவன் நினைவுகள்
தினமும் என் கண்முன் வந்துபோனது
கண்ணீராக....
அக்கண்ணீரையே அபிசேகமாக செய்து
அழுது புலம்பினேன் இறைவனிடம்
வலியின் உயரம் வரை சென்று கூச்சலிட்டது
என் உள்ளம்...
அன்பில் என்னில் அம்பெய்தி...
புது கவிதைகள் வடித்து பொக்கிசமாய்
என்னை வடிவமைத்த என் நண்பனை
மீண்டும் கொடுக்க ஆறு வருடங்கள்
ஆனது அந்த இறைவனுக்கு...
சரி
உறவுகளை பங்கிட்டு தரும்
உயிர்களின் மத்தியில்,உயிரை
பங்கிட்டு தரும் உறவை மீண்டும் தந்தமைக்கு
அந்த இறைவனுக்கு நன்றிகள் கோடி...
எனினும்
என் கண்ணிமை மூடும் வரை
சேர்ந்திருப்போம் என்று நான் எண்ணிய
என் உயிருக்கும் மேலான என்
நண்பனை பரித்தானே
என் பள்ளி நட்பை மீட்டுக்கொடுத்து..
நான் சிரிப்பதா?
இல்லை அழுவதா?
இதுதான் என் விதியா?
இல்லை காலம் செய்த சதியா?
கரை தேடும் நதி நான்
கரை யாக வந்தவனைய்
பிரித்தானே அந்த இறைவன்..
ரெட்டைச் சூரியன் -இந்த
ஒற்றை சருகை சுட்டெரிப்பதைய்
கண்டு இரண்டில் ஒன்றை
நிலவாக்கினானோ???
நட்பின் துயரை ,நட்பின் பிரிவை
பிரிந்த நட்பை தந்து
குறைக்க என்னினானோ?
இதம் தரும் நட்புக்கு இணை
என்று சொல்ல ஏதும் இல்லை
என்பதை அறிய மறந்தானோ
அந்த இறைவன்???
மறக்க முடியுமா அந் நாட்களை???????
காலத்தின் சுழற்ச்சியில் நாட்கள்
காட்டாறு வேகத்தில் நகர்ந்தாலும்
இன்னுமென்
நியாபக நிழலில் அவனுருவம்
வந்து போகிறதே??
நியாபகங்கள் மட்டும், நெஞ்சில்
நின்று வதைக்கிறதே....நான் என்செய்ய??
இதம் தந்த நட்பு
வதம் செய்கிறது
உண்மை நட்பின் அத்தியாயத்தில்
உயர்ந்த இடம் பிடித்த என் நண்பா..
பண்பட்ட என் நெஞ்சில்
உன்னால் எத்தனை வடுக்கள்?????????????
உண்மை நட்பு மடிவதில்
எனக்கு உடன் பாடில்லை!!!!
காலன் வந்து என்னைக்
களவு கொள்ளும் மட்டும் நானவது
நட்போடு வாழ்ந்து விடுகிறேன்...
தீயே வந்து
திலகம் இட்டதே!
தீவாய் தீவாய் தவிக்கிறேன்
தீதில்லை நன்றே
என் நட்போடு சேர்ந்திடு நண்பா!!!!!!!!!!!