கூட இருந்தே குழி பறிக்கும் நட்பு...!!!

நட்பு இன்னொரு நட்புக்கு
தீங்கு செய்யும் போது கூட
மன்னிக்கப்படுகிறது,
அதுவே,
துரோகம் செய்யும் போது
உயிர் எடுக்கவும் துணிகிறது..!!

கட்டியணைத்து கத்தியில் குத்தும்
எதிரியை கூட நம்பலாம்,
கை குலுக்கி குழியில் தள்ளும்
துரோகியை நம்ப கூடாது..!!!

எமனுக்கு நண்பன் என
எவனும் கிடையாதுபோல,
அவனுக்கும் ஒரு துரோகி
நண்பனாகி இருந்திருந்தால்,
உயிர் போகும் வலியின்
உண்மை புரிந்திருக்கும்..!!!

இழுத்துவைத்து நாக்கை அறுப்பேன்
நட்பில் குறை சொல்லியிருந்தால்,
உயிரை கூட பிய்த்து கொடுப்பேன்
அவன் வேண்டுமென கேட்டிருந்தால்..!!
ஆனால் அமைதியாக இருந்தே
முதுகில் குத்தி விட்டான்..!!

அவனுடன் சுற்றிய நாட்களில்,
கூட இருந்தே குழி பறிப்பவர்களின்
கதையை கூட நம்பவில்லை,
பின்னாளில் தெரிந்து கொண்டேன்
அந்த கதையின் நாயகன் அவனே...!!

சாகும் வரை உடனிருப்பது
நட்பு மட்டுமே என்று
எத்தனயோ அறிஞர்கள் சொல்லி
கேட்டிருக்கிறேன்,
ஆனால் அந்த சாவை காட்டுவதும்
இந்த பொல்லாத நட்பு தான் என
யாருமே சொல்லி தரவில்லை..!!

நட்பிற்காக எதையும் இழக்க துணிந்த
நட்பே உயிரையும் இழக்கிறது,
எதையாவது எதிர்பார்க்கும் நட்பு
உயிரை மட்டுமே எடுக்கிறது..!!!

எழுதியவர் : மனோ ரெட் (20-Jul-13, 11:32 am)
பார்வை : 1448

மேலே