நினைவில் வை !!

பாடும் கடல் மீன்கள் பெற்ற
மணித்திரு நாடே - நாடும்
எதிர் தேசத்தோடுனக்கு
நாட்டம் ஏனோ ?

பூனை தின்ற
புல்லு போலனதிந்த - நீல
பூவை சூடும் பூவை பெற்ற
மக்கள் கூட்டம்

ஒரு குடை பிளவு பட்டு
மூனாய் போச்சு
குடை நடுவில் பொத்தல் விழுந்து
கிழிஞ்சும் போச்சி !

அடிமை மீட்டு அடிமையாக்கி
அடக்கும் கூட்டம்
தலையின் மீது
இடியை தாங்கும் நாளுமாச்சி

வெறி பிடிச்ச நாயை போல
முன்னவங்க
வெளி நடப்பு தெரியாமல்
விதச்சதெல்லம்

பார்த்திருக்க விளைந்தது -நாம்
அறியாமலே -அதை
அறுவடையும் செய்கிறோம்
இந்நாளிலே !

அறிவாலே அறிவாளை
அடக்கிடலாம் -நம்
அறுவடை பற்றி எதிர்காலம்
அறியாவரை !

அறுத்ததெல்லாம் தூக்கிப்போடு
அடுப்பு நெருப்புக்கு
தவரியேதும் கொடுத்திடதே
பிள்ளைகளுக்கு உன் பிள்ளைகளுக்கு !!!!!!!

எழுதியவர் : அனுஷா nadaraja (18-Jul-13, 9:47 pm)
சேர்த்தது : anusha nadaraja
பார்வை : 139

மேலே