பொது ஜனக் குரல்

தேர்தல் திருவிழாவில்
தொலைந்து போனது
ஜனநாயகக் குழந்தை!

உலக அதிசயங்களில் ஒன்று
பிழையே இல்லாத
வாக்காளர் அட்டை!

இங்கு ஓட்டுகள் விற்கப்படும்
அதிகபட்ச குறைந்த விலை
பிரியாணிப் பொட்டலம்!

வாக்காளர் பட்டியலில்
விடுபட்டுப் போயிருந்தது
தேர்தல் அதிகாரியின் பெயர்!

இன்றே கடைசி
பின்பு தேடினாலும் கிடைக்கமாட்டார்
தொகுதி வேட்பாளர்!

நேற்றைய எதிரி
இன்றைய நண்பன்
தேர்தல் கூட்டணி!

வெ. நாதமணி
18/07/2013

எழுதியவர் : வெ. நாதமணி (18-Jul-13, 10:10 pm)
பார்வை : 110

மேலே