விரலை விடுத்த பேனா

பல அரிதாரங்களுக்கு
நீயே ஆதாரம்
உன் இழப்பு
தமிழுக்குப் பெரும் சேதாரம்...!
பல அரியணைகளுக்கு
உன் பேனாமுனையே
பிருமனை
உன் பிரிவால் பிரிந்ததோ
எதுகை மோனை...!
உன் வாக்கே
தமிழுக்கு மூக்கு
உன் தமிழுக்கு
என்றும் இல்லை மூப்பு...!
சொல்லாயிரம் கொண்டு
பல்லாயிரம்
தமிழ் மனங்களை உழுதது
உன் எழுத்துக் கலப்பை
உன் மரணம் விட்டுச் சென்றது
பெரும் களைப்பை..!
நோய் கொண்டு போனது
தாய் தந்த மெய் மட்டுமே
தமிழ்த்தாய் தந்த வாய் மை
வற்றாது பாயும் வலிமை
திக்கெட்டுமே...!