நித்தம் உன்னை என் நெஞ்சில் சுமபேனடி 555

உயிரானவளே...

உன்னை நான் கரம்
பிடிக்கும் அந்த நாளில்...

நான் கொடுக்கும்
புடவையை...

அணிந்து
கொண்டு...

நான் சூடும்
மணமாலையை...

ஏற்று
கொண்டு...

நான் கட்டும்
தாலியை...

உன் மார்பிலே
சுமந்து கொண்டு...

உன் நெஞ்சிலே என்னை
சுமந்து கொண்டு...

என் கரம் கோர்த்து
நடை போடடி...

என்னவளாக...

தங்கமென
ஜொலிக்கும்...

உன் அங்கத்தின்
அழகு...

உன் காதில்
சங்கீதம் பாடும்...

தங்கம் தோற்று
போனதடி...

விலையில்லா
உன் இதயத்தில்...

என்னை மூடி
வைத்தாய்...

விலை
போகும் தங்கம்...

உன் அங்கத்திற்கு
எதற்கடி...

என்னவளே நித்தம்
ஆயிரம் முத்தங்கள் தந்து...

உன்னை சுமப்பேன்
என்றும் என் நெஞ்சில்...

என் மனைவியாக
உன்னை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Jul-13, 5:23 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 169

மேலே