புல்லாங்குழல்..

என் கைகளில் தவழ்ந்திடும்
உன் தேகத்தை
மெல்லத் தடவினேன்
இதழோடு இதழ் சேர்த்து
முத்தங்களும் தந்தேன்
அதிலுணர்ந்த உன்
சப்தத்தில் நீயோ
என் இதயத்தை
அல்லவோ திருடினாய்
திருடியது நீயென்றாலும்
தேட முடியாத
நிலையிலே நானும்..
தேடினேன்.. தேடினேன்..
என்னை நானே..
கடைசியில்..
கண்டேன்.. கண்டேன்..
என்னை உன் மடியிலே
நானும்..
மயங்கிய நிலையிலே
நானும்..