கவிஞர் வாலி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
இழந்தது ஒளி கவியை
இருண்டு போனதல்லோ இவ்வுலகம்
அழைத்தது வானவரே
அழுவது மண்ணுலகே....
காவியம் படைத்தவரே
ஓவியமாய் போனீரோ
பசுமை கவிதை வடித்தவரே
காய்ந்த சருகானீரோ...
காலனுக்கு உன்கவிதை
கொண்டு செல்ல உரிமை இல்லை
உம் கவிதை உயிரினிலே
நின் புகழ் வாழுமிங்கே
பாடல் எழுதும் போதினிலும்
தனிமை தேடாதவரே
பல்லக்கில் போக மட்டும்
தனிமை மிக பிடித்ததுவோ??
நின் போல் பாடல் சொல்ல
வேறொருவர் மண்ணில் இல்லை
வேரறுந்து போனவரே - எக்காலும்
உம் நினைவறுந்து போகாது...
வாலி உமை வதம் செய்ய
நோய் என்னும் கூற்றுவனோ
கூற்றுவனை கொண்டுவந்தால் - அவனை
ஏற்றி வைப்போம் கழுமரத்தில்...
தேகம் சாய்த்து விட்டாய்
சோகம் ஏற்றிவிட்டாய்
வானுலகம் சென்றவரே - ஓர்நாள்
உமை தேடி வந்து காண்கின்றோம்....