மாற்ற முடியாதது
"எது நடந்ததோ அது நன்றாகவே....."
எப்போதும் என் நினைவில் நீங்கா
கீதை வரிகள் இவை!
எது நடந்தாலும் அது நல்லதிற்கு.....
எப்போதும் என் மனதிற்கு
கட்டையிட்டபடியே உள்ளேன் !
கெட்டது என்பது மிகப்பெரிய நல்லதிற்கான
நுழைவாயில் சமாதானபடுத்திக்
கொண்டேன்.
இன்று மட்டுமல்ல
எதிர் காலத்திலும் மாற்றமுடியாத
வார்த்தைகள் இவையே....
வாழ்வதற்கு வேண்டியது
வாழ்க்கையல்ல .....
நான் அறிந்தவரை
சமாதனங்களும்
சால்யப்புகளும்
சமாளிப்புக்கலுமே!
சமூகம் ஏன் அதனையே
வாழ்வு என்கிறது என்பது
இன்று வரை .....
எவருமே
எவருக்குமே
விளக்க முடியாத உண்மை .
இறந்த கால அனுபவம்
நிகழ்கால வாழ்வு
எதிர்கால எதிர்பார்ப்பு
ஏமாற்றமே இல்லாததா?
எதிர்பார்ப்பாக என்றும்......
நிலைத்திருக்கும் கீதை வரிகள் மட்டுமே!