en nesamanavanae
![](https://eluthu.com/images/loading.gif)
உன் குடையோடு மழையாவேன்
கம்பியின் வழியே
மெல்ல இறங்கி
அதன் விளிம்பில்
ஊஞ்சல் ஆடி
உன்னை மிக அருகில்
கண்ட விநாடி
சர்வமும் செயலிழந்து
தரையில் விழுந்து
உன் காலடி நிலத்தில் மோட்சம் பெறுவேன்
உன் இதழோடு மொழியாவேன்
நாவில் அடுக்கப்பட்ட
வார்த்தை வரிசையில்
ஒளிந்து கொண்டு
தொண்டை குழியின்
அழுத்தத்தால் நெட்டி தள்ளப்பட்டு
உன் மென் அதரங்களின்
இடுக்கில் இளைப்பாறி
உன் மூச்சு காற்றில் முக்தி அடைவேன்
உன் நிழலோடு நிஜமாவேன்
உச்சிவெயில் உந்தன்
புகைப்படத்தை பூமியில்
பறைசாற்றியபடி இருக்க
உன் பாதியோடு அது நகரும் போது
அதன் எல்லைக்குள்
என்னை துகளாக்கி
உன் காலணியின் அசைவால்
காற்றில் பயணப்பட்டு
உன் விண்ணோடு மின்மினியாவேன்
இவ்வாறு,
நீ அறியாமல் உன் உலகின்
எல்லா பக்கத்திலும்
என் உருவம் வரைவேன்
இறுதியில்,
உன் உணர்வுகளோடு உருத்தாகி
உன் பிடியில் என் உயிரை விடுவேன்